சென்னை அடையாறு பெட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
13.12.23 அன்று தனியார் கல்லூரிகள் சங்கத்தின் சார்பாகக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தற்பொழுது இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் இளநிலை தொழில் நிர்வாகம் (BBA), இளநிலை கணினிப் பயன்பாடு
(BCA) ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்குப் பாடம்
நடத்த, அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவிடம் (AICTE) அனுமதி
பெற்றிருக்க வேண்டுமெனச் செய்திதாள்களில் வெளியாகியுள்ளன. அதனால் இது
குறித்துத் தனியார் கல்லூரிகள் சங்கம், அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்
குழுவின் தலையீடு, கல்விக் கட்டணம் நிர்ணயம், பாடத்திட்டம், கல்லூரி
முதல்வர்களின் பணிக்காலம் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் திருமதி
வாசுகி, பொதுச் செயலாளர் திரு. விகாஸ் சுரானா, பொருளாளர் ஸ்ரீகுமார் போம்ரா,
துணைத் தலைவர் நிமிஷ் டோலியா, செயற்குழு உறுப்பினர்கள் திரு.அப்ரார் அகமது,
திரு. சரவணக்குமார், பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர்
மற்றும் தாளாளர் முனைவர் ஸ்டானிஸ் லாஸ், பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியின் கல்வி முதன்மையர் முனைவர் பாத்திமா வசந்த், கல்லூரி முதல்வர்
முனைவர் ஆரோக்கிய மேரி கீதா தாஸ், கல்லூரித் துணை முதல்வர் முனைவர்
அனந்த பிரியா மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகளும்
முதல்வர்களும் கலந்து கொண்டனர்.