சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் புதிய தலைவராக குறிஞ்சி என். சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்படாத நிலையில் உள்ள அரசு செட்டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு செட்டாப் பாக்ஸ்களை கொடுக்காமல் கூடுதல் லாபத்திற்காக தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்கும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார். மேலும்
கொரோனா காலத்தில் மாணவர்கள் இணையதளம் வாயிலாக வகுப்புகளில் கலந்து கொள்வதால் கேபிள் வழியாக இணையதள வசதியை கிராமங்கள் வரை கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அரசு கேபிள் டிவியை பொறுத்தவரை 140 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியுடன் 200 சேனல்கள் வழங்கப்படுகிறது எனவும் சிவக்குமார் கூறினார்.