2.25 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன வசதிகள் கொண்ட மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு சுந்தரபுரத்தில் உள்ள விளையாட்டு திடலில் கால்பந்து மைதானம், கைபந்து மைதானம், உடற்பயிற்சி கூடம் போன்ற நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பரந்தாமன் புளியந்தோப்பு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு திடலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர் அதனடிப்படையில் 2.25 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது
இந்த பகுதியில் ஏராளமான தேசிய மற்றும் மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் உள்ளனர் அவர்கள் சிறப்பான பயிற்சியை பெற்று வரும் காலங்களில் அரசு வேலைகளில் வெல்வதற்காக மைதானம் சிறப்பாக அமைக்கப்படும்
புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளர்கள் குடியேறுவதற்கு 1.5 லட்சம் கொடுக்க வேண்டும் என முந்தைய அரசின் சார்பாக சொல்லப்பட்டுள்ளது
இந்நிலையில் இப்பகுதி மக்கள் தங்களால் தொகையை கட்ட முடியாது என தங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இதுதொடர்பாக விரைவில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து தீர்வு காணப்படும் என கூறினார்
அதுமட்டுமல்லாமல் இப்பகுதிக்கு தேவையான வசதிகளை பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் பொதுமக்கள் தன்னார்வலர்கள் என அனைவரிடமும் கேட்டறிந்து பகுதிக்கு தேவையான வசதிகளை முதல்வரிடம் தெரிவிப்போம் என கூறினார்