சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது அன்பும் ஆக்கமும் அறக்கட்டளை இதன் தலைவர் V. வேல் நாகராஜ், செயலாளர் V. செந்தில்குமார், மற்றும் பொருளாளர் K. செந்தில்குமார் இந்த அறக்கட்டளையின் சார்பில் சென்னை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தப் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாலை ஓரங்களில் வசிக்கும் சுமார் 200 நபர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி
ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் அரிசி ,19 மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை காவல் உதவி ஆணையாளர் மகிமை வீரன் சிறப்பு அழைப்பாளராக அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொரோனா காலம் இல்லாமல் மற்ற நாட்களிலும் சுமார் 50 முதல் 100 உணவு பொட்டலங்களை அறக்கட்டளை நிர்வாகிகள் கொடுத்து வந்தனர்.
இந்த அறக்கட்டளையின் அன்பான ஆக்கப் பணிகள் – உணவின்றி பசித்திருபோருக்கு இலவச உணவு வழங்குதல்,
இந்த அறக்கட்டளையின் சிறந்த நோக்கம். தானத்தில் சிறந்தது அன்னதானம் அந்த அன்னதானத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே நோக்கம்