பெண்மை, உறுதி மற்றும் பண்பாட்டு பெருமையைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி
சென்னை, 9 பிப்ரவரி 2025: டாடாவின் தயாரிப்பான தநைரா [Taneira], பெங்களூரைச் சேர்ந்த பிட்னஸ் நிறுவனமான ஜே ஜே ஆக்டிவ் [JJ Active] உடன் சேர்ந்து சென்னையில் இந்த ஞாயிற்றுக்கிழமை பெண்கள் புடவை அணிந்தபடி, உயிர்துடிப்பு மிக்க அதிகாலை ஓட்டத்தில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்துள்ளது. சென்னை நகரம் முழுவதுமுள்ள பெண்கள் கலைநயமிக்க சேலைகளை அணிந்து நொளம்பூரில் கூடி இந்த ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பெண்மை, உடல் திறன் மற்றும் சுதந்திரத்துக்கான அர்ப்பணிப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சென்னை தநைரா புடவை ஓட்டம் [Chennai chapter of Taneira saree run] நிகழ்ச்சியை தநைராவின் தலைமைச் செயல் அதிகாரியான திரு. அம்புஜ் நாராயணன் [Mr. Ambuj Narayan, CEO of Taneira] கொடியசைத்துத் துவக்கிவைத்தார். அவருடன் ஜே ஜே ஆக்டிவின் பயிற்சியாளர் ப்ரமோத்தும் [Coach Pramod, JJ Active] உடனிருந்தார்.
பாரம்பரியத்தையும் நவீனத்தையும் கொண்டாடும் உயிர்ப்பு மிக்க கொண்டாட்டம் தநைரா புடவை ஓட்டம் [Taneira Saree Run]. இந்த ஓட்ட நிகழ்வில் சமகால லட்சியங்களுடன், மகத்தான நம்முடைய மரபு அழகுற இணைகிறது. நவீனகால பெண்கள் பெண்மையின் வலுவை கம்பீரத்துடன் சமநிலையுடன் பேணுகிறார்களோ அப்படியாக புடவையை ஒரு உடையாக மட்டுமின்றி அவகளது ஆளுமையின், அடையாளத்தின், தன்னிறைவின், சுய வெளிப்பாட்டின் சின்னமாகவும் புடவை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த தனித்துவம் கொண்ட ஓட்ட நிகழ்ச்சி, சேலையின் ஆறு அடிகள் சம்பிரதாயக் கட்டுகளோடு பெண்ணை நிறுத்தவில்லை என்பதை நிரூபிக்கிறது. அவளை ஆற்றலுடன் இன்றைய உலகத்தின் மாறுதல்களுக்கேற்ப வாழ்க்கைப் பயணத்ஹ்தில் ஓடவைக்கிறதென்பதையும் தெரிவிக்கும் நிகழ்வாகும்.
புனே, பெங்களூரு, ஐதராபாத், கோல்கத்தா, அஹமதாபாத்தைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் புடவை ஓட்ட நிகழ்ச்சி பெண்களிடையே கூடுதல் அன்பையும் உறவையும் ஏற்படுத்தியுள்ளது. மன உறுதி மற்றும் பன்முகத் தன்மையின் தைரியமான அறிக்கையாக புடவையை இந்த ஓட்ட நிகழ்ச்சிகள் மாற்றியுள்ளன.
இந்த நிகழ்ச்சி பெற்றி தநைராவின் தலைமைச் செயல் அதிகாரியான அம்புஜ் நாராயண் [Mr. Ambuj Narayan, CEO, Taneira] பேசும்போது, “தநைரா புடவை ஓட்ட நிகழ்ச்சி பெண்மைக்கும் உடல் திறனுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி ஆகும். நளினம் மற்றும் மன உறுதிக்கு அடையாளமாக விளங்கக் கூடிய புடவையைக் கொண்டாடும் வகையில் வலுவான, நவீன பெண்கள் அதை அணிகிறார்கள். இந்த ஓட்ட நிகழ்ச்சியின் வழியாக புடவை தொடர்பான பார்வைகளை மாற்ற விரும்புகிறோம். பெண்மையின் வலு மற்றும் பன்முகத் தன்மையின் அடையாளமாக புடவையை மறுவரையறை செய்யும் நிகழ்ச்சி இது. ஜே ஜே ஆக்டிவ் உடனான எங்களது கூட்டு செயல்பாடு இந்தப் பார்வையை வலுப்படுத்தி, இன்றைய வாழ்க்கை முறைகளுக்கு சேலை எப்படிப் பொருந்துகிறதென்பதைக் காட்டுகிறது. பண்பாட்டுக்கும் செயல்வேகத்துக்கும் அடையாளமான சென்னை நகரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது அதை உறுதிப்படுத்துவதற்கே. ”
ஜே ஜே ஆக்டிவ்வின் பயிற்சியாளர் பிரமோத் பேசும்போது, “தங்கள் குடும்பத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றும் பெண்களுக்கு தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு குறைந்த நேரமே உள்ளது. தநைரா புடவை ஓட்ட நிகழ்வு, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை சௌகரியமான பாதுகாப்பான சூழலில் முன்னிலைப்படுத்துவதற்கு ஞாபகமூட்டும் நிகழ்ச்சியாகும். வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை வென்ற பெண்கள் தங்கள் கதைகளை சக பெண்களுக்குக் கூறி அவர்களை உற்சாகமூட்டும் நிகழ்ச்சியும் இது. தநைரா புடவை ஓட்ட நிகழ்வை நடத்தும் இந்தியாவின் ஆறாவது நகரம் சென்னை. தங்களைத் தன்னிறைவாக்கும் இயக்கத்தில் உற்சாகத்துடன் ஈடுபடுத்திக் கொண்ட சென்னை பெண்களின் அளப்பறிய உற்சாகத்தைப் பார்த்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.”