யோகா தெரபிஸ்ட் பத்ம பிரியதர்ஷினி,யோக தத்துவா நிறுவனர்

கோவையை பூர்வீகமாக கொண்ட பத்ம பிரியதர்ஷினி சென்னையில் யோகா மற்றும் அக்கு பஞ்சர் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். எல்லோரும் எல்லா விதமான யோகாசனங்களையும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அவரவர் உடலுக்கு ஏற்ப, அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஒருசில யோகாசனங்களை செய்தாலே ஆரோக்கியமாக வாழலாம் என்ற அடிப்படையில் யோகா பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

இதற்காக “யோக தத்துவா” என்ற யோகா தெரபி மையத்தை நடத்தி வரும் இவர் சர்வ தேச யோக தினத்தை முன்னிட்டு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யோக தத்துவா கடந்த 10 ஆண்டுகளாக முதுகு எலும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படக்கூடிய வலிகள் மற்றும் நோய்களில் இருந்து எவ்வாறு யோகா மூலம் நிவாரணம் பெறுவது என்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறது. வெறும் வலியில் இருந்து நிவாரணம் பெற வைப்பது மட்டுமின்றி தனி மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் யோகா உதவுகிறது” என்றார்.

பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தொடங்கி அவரவரது வேலைகளில் ஏற்படக்கூடிய கழுத்து, முதுகு மற்றும் மூட்டு சம்பந்தமான வலிகளை போக்க எளிமையான யோகா பயிற்சிகளைக் கற்றுத்தருகிறோம். குறிப்பாக தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து விடுபட தினமும் 15 நிமிடங்கள் மட்டுமே செய்யக்கூடிய யோகா பயிற்சிகளை அளிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

யோகா தெரபி மட்டுமின்றி உணவுக்கட்டுப்பாடு தொடர்பாக கற்பிக்கிறோம். என்னென்ன மாதிரியான உணவுகளை எந்தெந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் என்னென்ன மாதிரியான சத்துக்கள் கிடைக்கும் என அறிவுறுத்துகிறோம்.

சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சர்க்கரை நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பல பயிற்சிகள் யோகாவில் உள்ளன. அத்துடன் யோகா தெரபி மூலமாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுப்பதை குறைக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை தடுக்கவும் யோகா தெரபி மூலம் பயிற்சி அளிக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எந்த நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவராக இருந்தாலும் சரியான யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக தீர்வு பெறலாம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மருந்துகளை முற்றிலும் நிறுத்திவிட்டு நாங்கள் கற்றுத்தந்த யோகா தெரபியை முறையாக செய்து வந்தாலே போதுமானதாக இருக்கும் என்றார்.