நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022-ஐ
முன்னிட்டு வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் என்.சி.சி கடற்படைப் பிரிவு (NCC NAVAL யூனிட்), 2022 பிப்ரவரி 17 அன்று முதன்மைப் பள்ளி வளாகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்திற்கு போக்குவரத்து மற்றும் விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டர் (N2) திருமதி கௌசல்யா
சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இந்தப் பிரச்சாரம் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக உரிமையைத் தவறாமல் கடைபிடித்து வாக்களிக்கும்படி ஊக்குவிப்பதை வலியுறுத்தியது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும் வலியுறுத்தும் பதாகைகளையும் மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
இந்நிகழ்வு எமது வேலம்மாள்
நாட்டியாலயா மாணவர்களின் முன்மாதிரியான
நடன நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது,
மேலும்
இந்நிகழ்வில், பொதுமக்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காகத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன