பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு -நலனை
மத்திய – மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்
தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், இந்தியன் ஜர்னலிஸ்டு யூனியன், இண்டர்நேஷனல் ஜர்னலிஸ்ட் பெடரேஷன் இணைந்து நடத்திய சர்வதேச&இந்திய&மாநில அளவிலான பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
மாநில தலைவர் பா.சிவக்குமார், பொதுச்செயலாளர் கெ.கதிர்வேல், துணைத்தலைவர் சி.பெஞ்சமின் ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் பி. நிலாவேந்தன், துணைத்தலைவர் மீடியாராமு, இணைச்செயலாளர்கள் ஆர்.ரங்கபாஷ்யம், ஜெ.ஆர்.சுரேஷ், துணைச் செயலாளர்கள் ஏ.எம்.கிருஷ்ணமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற கர்நாடக மாநில பத்திரிகையாளர் சங்க தலைவர் ஆர்.நீலகண்டா, தமிழ்நாடு விஜிலென்ஸ் டிஜிபி பி.கே. ரவி ஐபிஎஸ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், உலக அமைதி நட்புறவு இயக்க தலைவர் கேஆர்கே உள்ளிட்ட பலரும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விரிவாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்து அரசாணையும், பத்திரிகையாளர் இழப்பு நிதி மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், செய்திதுறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
பத்திரிகையாளர் நலவாரியத்தின் பணிகளை சினிமா நலவாரிய அலுவலர்கள் கவனிப்பார்கள் என்ற அறிவிப்பினை அரசு மறு பரிசீலனை செய்து, பத்திரிகையாளர் நல வாரியத்துக்கு தனியான அலுவலகமும், அலுவலர்களையும் நியமித்து செயல்படுத்த வேண்டும்.
தாலுகா வாரியாக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும், அரசு செய்தித்துறை அங்கீகாரம் வழங்க வேண்டும்.
மாவட்டம் & தாலுகா வாரியாக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வீட்டுமனை, இலவச வீடு, உள்ளிட்ட நலத்திட்டங்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.
ஆன்லைன் மீடியாக்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது போல மாநில அரசும், ஆன்லைன் மீடியாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு நலனை மத்திய&மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பத்திரிகையாளர்கள் நல வாரியத்திலும் அரசு அமைக்க உள்ள பத்திரிகையாளர் ஆணையம், மற்றும் பிரஸ் கவுன்சில் உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் பிரதிநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்து இணைத்திட வேண்டும்.
தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்ந்த வழக்கு மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு சட்டம் சார்ந்த பணிகளை கவனிக்க சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எம்.பாஸ்கர், என்.எஸ்.வேந்தகுமார், வி.எஸ்.குமரன் ஆகியோர் தலைமையில் மாநில அளவிலான வழக்கறிஞர் பிரிவை ஏற்படுத்திடவும்,
தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், இந்தியன் ஜர்னலிஸ்ட் யூனியன், இண்டர்நேஷனல் ஜர்னலிஸ்ட் பெடரேஷன் இணைந்து நடத்திய சர்வதேச – இந்திய- மாநில அளவிலான பத்திரிகையாளர் பாதுகாப்பு நலன் குறித்த கருத்தரங்கில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
இக்கருத்தரங்க நிகழ்ச்சியை பி.கே. கிருஷ்ணதாஸ் சிறப்புற தொகுத்து வழங்கினார்.