சென்னை, 16 டிசம்பர் 2021: இந்திய கோழிப்பண்ணை தொழில்துறையை புரட்சிகரமாக மாற்றிய பெருமையும், 30-க்கும் அதிகமான ஆண்டுகள் நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கும் ரூ.9000 கோடி மதிப்புள்ள சுகுணா ஃபுட்ஸ், அதன் முதல் க்ளிக் & மார்ட்டர் பிராண்டு (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) – ஐ டெல்ஃபிரெஸ் என்ற பெயரில் தொடங்குவதை இன்று அறிவித்திருக்கிறது. குழும அளவில் முக்கியமான பிராண்டு மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக இந்த அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளும் மற்றும் தொடர்புடைய பிற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. சுகுணா குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு கோழிப்பண்ணை தயாரிப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் செயல்பாடு வடிவத்தில் இந்த புதிய அறிமுக பிராண்டான டெல்ஃபிரெஸ் செயல்படும். இப்புதிய பிராண்டில் இக்குழுமம் ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீட்டை செய்திருக்கிறது மற்றும் இதன்கீழ் 1000 அவுட்லெட்களை 2025 – ம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டிருக்கிறது.
சுகுணா குழுமத்தின் செயல் இயக்குனரும், இக்குழுமத்தின் இரண்டாவது தலைமுறை தலைவருமான திரு. விக்னேஷ் சௌந்தரராஜன் ஆகியோரின் சிந்தனையில் உருவான செயல்திட்டமே டெல்ஃபிரெஸ். நாடெங்கிலும் உள்ள அனைத்து மக்களின் உணவுத்தட்டுகளுக்கும் தரமான தயாரிப்புகளை கொண்டுபோய் சேர்ப்பதே இந்த க்ளிக் & மார்ட்டர் பிராண்டின் நோக்கமாகும். பிக்பேஸ்கட், குரோஃபெர்ஸ், ஜியோமார்ட், ஸ்விகி மற்றும் இதுபோன்ற இன்னும் பல முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் டெல்ஃபிரெஸ் – ன் தயாரிப்புகள் கிடைக்கும். சாப்பிடத் தயார்நிலையில், சமைக்கத் தயார்நிலையில் மற்றும் மேரினேட்டட் ஆகிய வெவ்வேறு வழிமுறைகளில் டெல்ஃபிரெஸ் – ன் தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆஃப்லைன் வழிமுறையான டெல்பிரெஸ் ரீடெய்ல் என்பது, தூய்மையான, இனிய சூழலில் புத்தம்புதிய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற ஸ்டோராக இருக்கும்.
சுகுணா குழுமத்தின் தலைவர் திரு. சௌந்தரராஜன்இந்நிகழ்வின்போது பேசுகையில், “கொரோனா பெருந்தொற்று ஒவ்வொரு தொழில்துறைக்குமே சிறந்த கற்றல் வாய்ப்பாக இருந்திருக்கிறது. இன்றைக்கு மிகவும் புதுமையான அணுகுமுறையில் எமது கோழிப்பண்ணைத் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதை காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொரோனா பெருந்தொற்றின் மூலம் பெறப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய நேர்மறை விளைவுகளுள் ஒன்றாகவே இதனை நாங்கள் கருதுகிறோம். இன்றைய டிஜிட்டல் உலகத்திற்குப் பொருத்தமாக இருப்பதற்கு நாங்கள் மேற்கொண்டிருக்கும் ஒரு பெரிய முன்னெடுப்பே இந்த பிராண்டுக்கு மறுபெயரிடுதல் செயல்பாடாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் கோழிப்பண்ணைப் பிரிவில் நிகழ்ந்து வரும் மாபெரும் உருமாற்றத்தை அதிக அளவு ஒட்டியதாகவே சுகுணாவிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்திய சந்தைக்கும் கூடுதலாக, நமது நாட்டைச் சேர்ந்த முறைப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணை பிராண்டுகளுக்கு உலகளவில் பிற சந்தைகளிலும் கணிசமான வளர்ச்சி வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் எமது பிசினஸை அதிகரிப்பதிலும் மற்றும் இந்த புதிய, புதுப்பிக்கப்பட்ட பிராண்டு செயல்உத்தியின் வழியாக உலகளவில் எமது சந்தைப் பங்கினை விரிவாக்குவதிலும் நாங்கள் மிகத்துல்லியமான கவனத்தை செலுத்தி வருகிறோம். சுகுணாவுடன் நேரடியான உறவைக் கொண்டிருக்கும் 40,000+ நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் மறைமுகமாக எங்களோடு இணைந்திருக்கின்ற 1,00,000+ நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மீது நாங்கள் தொடர்ந்து உறுதியான பொறுப்புறுதியை கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.
சுகுணா குழுமத்தின் செயல் இயக்குனர் திரு. விக்னேஷ் சௌந்தரராஜன் இந்நிகழ்வின்போது கூறியதாவது: “டெல்ஃபிரெஸ் பிராண்டை அறிமுகம் செய்வதிலும், ரீடெய்ல் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் வழியாக எமது தரமான தயாரிப்புகள் கிடைக்குமாறு செய்வதற்கான இந்நடவடிக்கையிலும் நாங்கள் உண்மையிலேயே பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம். எமது நுகர்வோர்களோடு ஆழமான பிணைப்பை உருவாக்கவும் மற்றும் அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்ளவும் ஒரு பொருத்தமான டிஜிட்டல், மின் – வர்த்தக செயல்உத்தி நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோழிப்பண்ணைத் தொழில்துறையில் முதன்மை வகிக்கும் நிறுவனமாக, இச்சந்தையில் எமது நிபுணத்துவத்தை அதிக ஆதாயமளிக்கும் வகையில் பயன்படுத்துவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். அனைவரின் உணவுத்தட்டுகளுக்கும் அதிக சக்தியளிக்கும் புரதத்தை கொண்டுபோய் சேர்ப்பது என்ற எமது கோட்பாட்டை இந்த செயல்நடவடிக்கை வலுப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
டெல்ஃபிரெஸ் பிராண்டு அறிமுகத்தோடு சேர்த்து, மறுகட்டமைப்புக்கான பல்வேறு முன்னெடுப்புகளையும் இக்குழுமம் அறிவித்திருக்கிறது. ஆற்றலை வலுவாக குறிக்கும் வகையில் அதனோடு பின்னிப் பிணைந்ததாக S என்ற ஆங்கில எழுத்தின் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் இக்குழுமத்தின் புதிய லோகோ அறிமுகமும் இவற்றுள் ஒன்றாகும். நிறுவனத்திற்கும் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான மிக உறுதியான பிணைப்பையும், பந்தத்தையும் இந்த லோகோ வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தக் குடும்பத்தினரின் நோயெதிர்ப்புத்திறனை வலுப்படுத்த உதவுகின்ற சுவையான புத்தம்புதிய மற்றும் தரமான இறைச்சியை தங்களது தயாரிப்பு வழங்குகிறது என்ற செய்தியினையும் இது நேர்த்தியாக எடுத்துரைக்கிறது.
சுகுணா ஃபுட்ஸ் குறித்து:சுகுணா ஃபுட்ஸ், கோழி வளர்ப்புத்துறையில் உலகளவில் முதன்மையான 10 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்தியாவில் 18 மாநிலங்களில் இயங்கிவரும் இந்நிறுவனம் கோழிப்பண்ணை தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தொகுப்பை வழங்கிவருகிறது. இறைச்சி கோழி (பிராய்லர்) மற்றும் முட்டையிடல் கோழிகள் வளர்ப்பு, கோழிக்குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலைகள், உற்பத்தி ஆலைகள், தடுப்பூசி மருந்துகள், மற்றும் ஏற்றுமதிகள் ஆகிய அனைத்தும் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளின் அங்கமாகத் திகழ்கின்றன. உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சி, மதிப்பு – கூட்டப்பட்ட முட்டைகள் மற்றும் உயிருள்ள பிராய்லர் கோழிகள் ஆகியவற்றை சுகுணா விற்பனைக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிதான, பாதுகாப்பான மற்றும் தூய்மையான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட கோழி இறைச்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மிக நவீன சில்லறை விற்பனையகங்களின் ஒரு சங்கிலித்தொடரையும் சுகுணா உருவாக்கியிருக்கிறது. சுகுணா ஃபுட்ஸ்-ன் பிரபலமான தயாரிப்பு பிரிவுகளுள் சுகுணா டெய்லி ஃபிரஷ், சுகுணா ஹோம் பைட்ஸ், சுகுணா எனிடைம் புராசஸ்ட் சிக்கன், மற்றும் சுகுணா மதிப்புக்கூட்டப்பட்ட சிறப்பு முட்டைகளின் நான்கு வகைகள் ஆகியவை உள்ளடங்கும்.
டெல்ஃபிரெஸ் குறித்து:டெல்ஃ.பிரெஸ் என்பது, 1984 – ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கறிக்கோழி வளர்ப்பு, அடைக்காப்பகங்கள், தீவன தயாரிப்பு, பதப்படுத்தல் ஆலைகள் மற்றும் பண்ணைக் கோழிகளுக்கான தடுப்பூசி உற்பத்தி ஆகியவை உட்பட, கோழிப்பண்ணை செயல்பாடுகளில் முன்னோடியான சுகுணா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் – ன் பதப்படுத்தப்பட்ட உணவுப்பிரிவின் கீழ் செயல்படுகின்ற சில்லறை விற்பனையகங்களின் ஒரு சங்கிலித்தொடர் பிராண்டாகும். உயர்தர ஸ்டோர்களின் தொகுப்பான இது, கோழியிறைச்சி, மதிப்புக்கூட்டப்பட்ட முட்டைகள், ஆட்டிறைச்சி மற்றும் இன்னும் பல தயாரிப்புகளுக்கான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. உங்களின் அமைவிடத்திற்கு அருகிலேயே பல்வேறு கோழியிறைச்சி தயாரிப்புகளை, நவீன வசதிகள் கொண்ட தாராள இடவசதி மற்றும் இனிய சூழல் நிலவுகின்ற சில்லறை விற்பனையகங்களை டெல்ஃபிரெஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உங்களது வசதிக்கேற்றவாறு விரும்புகின்ற அளவுகளில் வெவ்வேறு வகையான வெட்டப்பட்ட பகுதிகளாக கிடைக்கும் புத்தம்புதிய, குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் மிகப்பெரிய அணிவரிசையிலிருந்து விரும்புகிறவாறு தேர்வு செய்கின்ற இனிய அனுபவத்தை வாடிக்கையாளர்கள் டெல்ஃபிரெஸ் – ல் பெறலாம். தற்போது, பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், கொச்சின், திருவனந்தபுரம் போன்ற அனைத்து முன்னணி பெருநகரங்களிலும் 250+ விற்பனையகங்களைக் கொண்டு டெல்ஃபிரெஸ் இயங்கி வருகிறது. புனே, மும்பை, குர்கான், சண்டிகர் மற்றும் கோவா போன்ற இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களிலும் இந்த விற்பனையகங்களைத் தொடங்கி தனது செயல்பாட்டை விரிவாக்கவும் இந்த பிராண்டு திட்டங்கள் வகுத்திருக்கிறது.