மலேசியாவில் இயங்கி வரும் ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் சார்பாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ராக்ஸ்டார் இன்டர்நேஷனல் கோல்டன் குயின் விருது வழங்கும் விழா இந்தாண்டு சென்னையில் நடைபெற்றது.
சென்னை வடபழனியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த டத்தோ பருஷோத்தமன், இந்தியாவை சேர்ந்த சுரேஷ்குமார், அலோக குமரன், சிங்கப்பூரை சேர்ந்த பெருமாள் அருமை சந்திரன், இலங்கையை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், ஆகியோர் நாடுகளை சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், தங்களது துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்த 24 பெண்களுக்கு ராக்ஸ்டார் இன்டர்நேஷனல் கோல்டன் குயின் 2024 விருதுகள் வழங்கப்பட்டன.
நடனத்தில் உலக சாதனை புரிந்த சென்னை பள்ளிக்கரனையில் உள்ள நெக்ஸ்ட் மூவ் டான்ஸ் அகாடமியின் மாணவர்களுக்கு உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல், கீதாஞ்சலி கலை பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வாக இந்தாண்டிற்கான பாரத சக்கரா 2024 விருது வழங்கப்பட்டது.
ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனத்தின் நிறுவன தலைவர் ராகவி பவனேஸ்வரி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியை கிங் ராஜா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நஃபி டி.ஜெ. செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர்கள், நடன கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.