‘உயிரினப் பன்மிய வளங்காப்பில் ஆர்வமுள்ள செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் இயற்கை’ மறுசீரமைப்புக்கான பிசினஸ் தலைமைத்துவமையம்

‘உயிரினப் பன்மிய வளங்காப்பில் ஆர்வமுள்ள செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் இயற்கை’ மறுசீரமைப்புக்கான பிசினஸ் தலைமைத்துவமையம்

சென்னைஜூலை 31, 2024: நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் யுனைட்டட் நேஷன்ஸ் குளோபல் காம்பாக்ட் அமைப்பின் இந்திய கிளையாக யுஎன் குளோபல் காம்பாக்ட்நெட்வொர்க் இந்தியா (UN GCNI) செயல்படுகிறது, இலாபநோக்கற்ற சங்கமான இது, இந்தியாவின் முன்னணி பிசினஸ் பெருநிறுவனங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ் குழுமத்துடன்ஒருங்கிணைந்து, இயற்கை மறுசீரமைப்பில் பிசினஸ் தலைமைத்துவத்திற்கான மையத்தை இன்று சென்னைமாநகரில் தொடங்கியிருக்கிறது.

உயிரினப் பன்மிய வளங்காப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முறை நிபுணர்கள் பெரிய பிசினஸ் நிறுவனங்கள், அவை பிரதிநிதிகள், பள்ளிகள், சிந்தனை மையங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இம்மையத்தின் தொடக்க நிகழ்வான பயிலரங்கில் பங்கேற்றன.

UN GCNI ஆல் உருவாக்கப்பட்டுள்ள இயற்கைமறுசீரமைப்புக்கான பிசினஸ் தலைமைத்துவ மையம், உயிரினப்பன்மிய பாதுகாப்பில் தனியார் துறையின் ஈடுபாடுகளைகணிசமாக ஆழப்படுத்துவதையும் மற்றும் நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடிமுயற்சியாகும். தொலைநோக்கு பார்வைகொண்ட பிசினஸ் தலைவர்கள் மற்றும் தேசிய உயிரினப் பன்மிய ஆணையம்மற்றும் மாநில உயிரினப் பன்மிய வாரியங்கள் போன்ற அரசுநிறுவனங்களின் தீவிர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம்,உயிரினப் பன்மியத்தை பேணி வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் மற்றும் தகவலளிப்பு செயல்பாடுகளையும் இம்மையம் மேம்படுத்தும். கார்ப்பரேட் நிறுவனங்களின் ESG மற்றும் CSR செயல்நடவடிக்கைகளின் ஆதரவு இதற்கு துணையாக இருக்கும். ரீஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரீஃபெக்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் முதன்மை நிறுவனம்) ஆதரவுடன் மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் மானியத்தின் வழியாக சென்னையில்இம்மையத்தை UN GCNI நிறுவியிருக்கிறது.

யுஎன் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க்-ன் செயலாக்க இயக்குநர் திரு. ரத்னேஷ், இந்த சிறப்பான முயற்சி குறித்து விரிவாக பேசுகையில், “இந்த முன்னெடுப்பை தொடங்கியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமுதாயத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். முக்கியமான பலதரப்பு சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள், குறிப்பாக காலநிலை மாற்றம் மீது ஐநா சங்கத்தின் கட்டமைப்பு ஒப்பந்தம் (UNFCCC) உயிரினப் பன்மியம் மீதான ஐக்கிய நாடுகளில் ஒப்பந்தம் மற்றும் நிலங்கள் பாலைவனமாவதை எதிர்த்துப் போரிடுவதற்கான ஒப்பந்தம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக நாடுகளின் அளவில் செய்யப்பட்ட பொறுப்புறுதிகள் மற்றும் கார்ப்பரேட் திட்டங்களின்கீழ் உள்ளூரளவில், தேசியளவில் மற்றும் உலகளவில் ஏற்கப்பட்டிருக்கும் கடப்பாடுகளை அடைவதற்கு பிசினஸ் நிறுவனங்களுக்கும் மற்றும் அரசுகளுக்கும் ஆதரவளிப்பது இம்மையத்தின் நோக்கமாகும். நமது உயிரினப் பன்மிய ஆதார வளங்களின் வழியாக வெளிப்படுத்தப்படும் நமது வளமான இயற்கை பாரம்பரியத்தை இன்னும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மீது கார்ப்பரேட் துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் முகமைகளோடு தீவிரமாக கூட்டுவகிப்பில் இணைந்து செயல்பட UNGCNI முனைகிறது. இம்முயற்சியில் தீவிர ஆர்வத்துடன் பங்கேற்புகளுடன் ஒத்துழைப்புகளும் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

இயற்கை மறுசீரமைப்புக்கான பிசினஸ் தலைமைத்துவ மையம், உயிரினப் பன்மியத்திற்கான வணிக உத்திகள் மற்றும்செயல்பாடுகளில் சிறப்பான ஒருங்கிணைப்பை வழங்கும் அறிவுப் பகிர்வு தளமாகச் செயல்படும். உயிரினப் பன்மியம்தொடர்பாக தேசிய மற்றும் உலக அளவில் எதிர்பார்க்கப்படும்தற்போதைய மற்றும் வரவிருக்கும் இணக்க நிலை அல்லதுவெளிப்படுத்தல்களின் தரத்தை மேம்படுத்த இம்மையம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும். உயிரினப் பன்மிய உரையாடல் தொடர்புடைய உலகளாவிய மற்றும் தேசிய முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளுடன் தனியார் துறை நடவடிக்கைகளுக்கு சிறப்பான இணைப்பு வசதிகளை இம்மையம் ஏதுவாக்கும். அத்துடன், பிசினஸ் நிறுவனங்களுக்கும் மற்றும் உயிரினப் பன்மிய உரையாடல் குறிக்கோள்களுக்கும் இடையே சிறந்த ஒத்திசைவுக்குபங்களிக்கும் நடைமுறை எதார்த்த கொள்கைகளை வகுக்கபல்வேறு அக்கறை பங்காளர்களுக்கு இடையில் உரையாடல் நிகழ்வதை ஆதரிக்கும். 

இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்ட ரீஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ன் நிர்வாகஇயக்குநர், திருஅனில் ஜெயின்“ரீஃபெக்ஸ் குழுமம் ஒருநிலைப்பு தன்மையுள்ள மற்றும் சுற்றுச்சூழலுக்கு தோழமையானவணிக மாதிரியை பின்பற்றுவதில் உறுதிபூண்டுள்ளது. இத்திட்டத்தில் UN குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க்குடன்கூட்டாளராக இணைந்திருப்பதில் நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். மேலும் நாங்கள் ஒன்றாக இணைந்துகுறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்று நான்நம்புகிறேன். இந்த உயிரினப் பன்மிய மையம் தொடங்கப்பட்டிருப்பது இயற்கையை பாதுகாப்பதற்காகமட்டும் அல்ல; இது ஆர்வமுள்ள பங்காளர்கள் மற்றும்சமூகத்தினர் மத்தியில் கல்வி மற்றும் விழிப்புணர்வைஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். சுற்றுச்சூழல்மறுசீரமைப்பு மற்றும் உயிரினப் பன்மிய பாதுகாப்பில் சிறந்தநடைமுறைகள் மற்றும் சாதனைகளை பகிர்ந்துகொள்வதற்கான தளமாகவும் இம்மையம் செயல்படும். எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதைக் காண்பிப்பதன்மூலம், இந்த மிகமுக்கியமான முயற்சிகளில் எங்களுடன் சேரமற்ற பங்காளர்களையும், நிறுவனங்களையும் நாங்கள்ஊக்குவிப்போம் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.

இம்மையத்தின் திறப்பு விழா நிகழ்வைத் தொடர்ந்து உயிரினப் பன்மிய பாதுகாப்பில் சிறப்பான நிபுணர்கள் இடம்பெற்ற குழுவிவாதம் நடைபெற்றது. இதில் உயிரினப் பன்மிய பாதுகாப்பில்பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கு, பெருநிறுவன செயல்உத்திகளில் உயிரினப் பன்மியத்தை ஒருங்கிணைப்பதற்கான புதுமையான அணுகுமுறைகள், சாதனை நிகழ்வுகள் மற்றும் உயிரினப் பன்மிய பாதுகாப்புக்கான முன்னெடுப்புகளை செயல்படுத்துவதில்உள்ள சவால்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன.