EssEmm Corporation is renowned for its commitment to culinary innovation and proudly celebrates the legacy of its flagship brand, Cosmos. Established in 1997 founded by M.Sathish Kumar Nair,
Day: February 24, 2025
பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில் கார்டன்® வரேலி தங்களது’ப்ளூம் இன் கார்டன்’ கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்திய ஜவுளித் துறையில் பிரபலமாக விளங்கும் கார்டன்® வரேலி நிறுவனம், தி சாட்டர்ஜி குழுமத்தின் (TCG)தலைமையில் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தில் தங்களதுபயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் பெருமையுடன்அதன் சிக்னச்சர் கலெக்ஷனான ‘ப்ளூம் இன் கார்டனை‘ பாரத்டெக்ஸ் 2025 கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதுநேர்த்தி, கைவினைத்திறன் மற்றும் தற்காலத்திய ஃபேஷன்ஆகியவற்றை போற்றி சிறப்பிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் அழகு சேர்க்கும்விதமாக, ‘பிரிண்ட்ஸ் ஆஃப் இந்தியா‘ கலெக்ஷனும்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்தியாவின் வளமான ஜவுளிபாரம்பரியத்திற்கு ஒரு கலை அஞ்சலி செலுத்தும் வகையில்இந்த கலெக்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆக பிராண்டின்போர்ட்ஃபோலியோவில் பலவிதமான புதுப்புது ரகங்கள்சேர்க்கப்பட்டு வருகின்றன. ஜவுளித் துறையில் விரைவான வளர்ச்சியை ஊக்குவித்து அதன்மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடித்தளத்தைவலுப்படுத்துவதில் இந்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் இந்த மதிப்புமிக்க கண்காட்சியில்மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாண்புமிகு பிரதமர் அவர்கள் பிப்ரவரி 16 ஆம்தேதி இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்தபோது, கார்டன்-எம்.சி.பி.ஐ அரங்கிற்குள் நுழைந்தார், அப்போதுஅங்குள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள்அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடி மகிழ்ந்தார். கார்டன்நிறுவனத்தின் சார்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி திருஅமிதவா பானர்ஜி பேசினார். செயற்கை இழைஅடிப்படையிலான ஜவுளித் தொழிலின் தற்போதைய நிலைகுறித்தும், இந்தத் துறையில் விரைவான வளர்ச்சிக்குஆதரவளிக்க பல்வேறு பிரிவுகள் மேற்கொண்டுள்ளமுன்முயற்சிகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பிப்ரவரி 14 ஆம் தேதி தொடக்க விழாவில், மாண்புமிகுஜவுளித்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் கார்டன்-எம்.சி.பி.ஐஅரங்கிற்குள் வருகை தந்தார். அமைச்சரின் வருகையின் போதுஎம்.சி.பி.ஐ நிர்வாக இயக்குனர் திரு. தேபி பிரசாத் பத்ரா மற்றும்வரேலி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மகேந்திர சிங்பதூரியா ஆகியோர் உடனிருந்தனர். நுகர்வோருக்கு கட்டாயமதிப்பை வழங்குவதற்காக பி.டி.ஏ, நூல் மற்றும் துணிஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் டி.சி.ஜி குழுமநிறுவனங்களின் தனித்துவமான நன்மையை அவர்கள் எடுத்துக்கூறினர். 1970 களில் இருந்து செயல்பட்டு வருகின்ற சிறந்தபாரம்பரியத்துடன், கார்டன்® வரேலி ஆறு கெஜம் புடவையில்புதுமையையும் கலைத்திறனையும் புகுத்தி புதிய சாதனைசெய்துள்ளது. இந்த பிராண்ட் இப்போது ஒரு உறுதியானபார்வையுடன் முன்னோக்கி பயணிக்கிறது, தலைமுறைகளைக்கடந்து பெண்களுக்கான பலதரப்பட்ட மற்றும்தற்காலத்திற்கேற்ப புராடக்ட் ரகங்களை தொடர்ந்துஅறிமுகப்படுத்தி வருகிறது. தனது செயல்பாட்டைவிரிவுபடுத்தும் வகையில், அதன் ஒரு பகுதியாக, கார்டன்® வரேலி வருங்காலத்தில் இந்தியா முழுவதும் பிரத்யேக பிராண்ட்அவுட்லெட்டுகளைத் திறக்கவுள்ளது., இந்த ஸ்டோர்களில்பிராண்டின் சிக்னச்சர் கலெக்ஷன்கள் மற்றும் பெஸ்போக்ஃபேஷன் கான்செப்ட்கள் அறிமுகப்படுத்தப்படும். GSMPL (கார்டன்® சில்க் மில்ஸ் பிரைவேட் லிமிடெட்), இயக்குநர் திரு.தேபி பிரசாத் பத்ரா கூறியதாவது, “ப்ளூம் இன்கார்டன் கலெக்ஷன்கள் மூலம், இந்திய பெண்களின்அடையாளம் மற்றும் ஆசைகளுக்கு ஏற்ப பொருத்தமானகாலத்தால் அழியாத ஜவுளிகளைத் தயாரித்து வழங்குவதன்மூலம் அவர்களின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுகிறோம்மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிண்ட்ஸ் ஆஃப்இந்தியா கலெக்ஷனும் ஒரு கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்திமற்ற கலெக்ஷன்களுடன் சேர்த்து நிறைந்த அளவிலானரகங்களை மக்களுக்கு வழங்குகிறது”. டி.சி.ஜியின் தலைமையின் கீழ், கார்டன்® வரேலி பாரம்பரியத்தையும்நவீனத்தையும் ஒன்றிணைத்து பெண்கள் ஃபேஷனுக்கான ஒரேஇடமாக உருவாகி வருகிறது” பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில்இந்த ப்ளூம் இன் கார்டன் கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தியதன்மூலம், புதுமை, கைவினைத்திறன் மற்றும் எளிதாக வாங்கும் நிலைஆகியவற்றால் உந்தப்படும் கார்டன்® வரேலியின் புதிய பயணம்ஆரம்பிக்கிறது. இந்த பிராண்ட் இந்திய ஃபேஷனை நேர்த்தி மற்றும்அசல் தன்மையுடன் செம்மையாக்குவதில் உறுதியாக உள்ளது.
ICD Bestows Honorary Fellowship on SRM Chancellor
Chennai , Feb 2025 : The International College of Dentistry (ICD) Section VI (India, Sri Lanka & Nepal) has conferred the prestigious Honorary Fellowship upon
Sanghamitra ‘Peace Walk’ – Rotary International District 3234’s United Efforts with Queen Mary’s College to Combat Drug Addiction
Chennai, February 2025 Commemorating the 120th birth anniversary of Rotary, the Rotary International district 3234 in association with Queen Mary’s College organized a ‘Peace Walk’ against drugs with ‘Say No