ஞாயம் கேட்ட தங்கச்சிக்கு அசிங்கம் அவமானம் டாக்டர். அழகுதமிழ்செல்வி, M.D.,

நான் திருமதி. டாக்டர். அழகு தமிழ் செல்வி, M.D., மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐசரி வேலனின்இரண்டாவது மகள், டாக்டர் ஜெ.அருள் அவர்களின் மனைவியும், திரு. ஐசரி கணேஷின் இரண்டாவதுசகோதரியாகிய நான் சென்னை மயிலாப்பூரில் உள்ளசெல்வி ஸ்கேன் மையத்தின் ஸ்கேன் மருத்துவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறேன். என் தந்தை திரு. ஐசரி வேலன் அவர்கள் 14-05-1987 அன்று காலமானார். அப்போதைய தமிழக முதல்வராகஇருந்த டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 07-11-1987 அன்று எங்கள் வேலன் குடும்பத்திற்கு மிகப் பெரிய தொகையை வழங்கினார்.   அந்தக் குடும்பப் பணம் 30-12-1987 அன்று கடன்களைத்தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள பணம் மற்றும்நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்த நிலங்களில்(அப்பா அம்மாவின் சொத்து) 24 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு, பெறப்பட்ட பணத்தின்மூலம், “VAEL’S EDUCATIONAL TRUST” ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் மைலாப்பூர், பல்லாவரம் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு நிலங்கள் வாங்கப்பயன்படுத்தப்பட்டது.  டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்க்காககொடுத்த பணத்தில், எங்கள் குடும்ப கடனை அடைத்துமீதம் உள்ள  தொகை  மற்றும் அப்பா அம்மாவின் சொத்தைவைத்துVAEL’S EDUCATIONAL TRUST  ஆரம்பித்தோம். இதை திரு.ஐசரி கணேஷ் அண்ணன் அவர்கள் பல ஊடகங்கள் மற்றும் , நேர்காணல்களில் ஒப்புக்கொண்ட உண்மை. எனவே  வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் குடும்பசொத்தின் மூலதனமாக வந்தது தான், டாக்டர்.ஐசரிகணேஷ் சுயமாக சம்பாதித்தது இல்லை.  இதற்கிடையில் 1992 ஆம் ஆண்டு “VAEL’S EDUCATIONAL TRUST” நிறுவப்பட்டது மற்றும் 06-07-1992 அன்று ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை பத்திரம்உருவாக்கப்பட்டது, எனது சகோதரர் டாக்டர் ஐசரி கணேஷ்நிர்வாக அறங்காவலராகவும், எனது தாயார் மற்றும் எனதுமூத்த சகோதரி திருமதி மகாலட்சுமி மற்றும் நான் வாழ்நாள்அறங்காவலராக இருக்கிறோம், இது வாழ்நாள் முழுவதும்தொடரும்.   எனக்கு 13 வயது மட்டுமே இருந்தபோது, என் தந்தைஇறந்துவிட்டார், நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன், ஆதரவான பராமரிப்பு மற்றும் பாசத்திற்காக என் மூத்தசகோதரனை தந்தையாகப் பார்த்தேன்.

Read More