இந்திய கொடிக்கு பக்கத்தில் ஆஸ்திரேலிய கொடி.. ஓஹோ விவகாரம் பெருசா இருக்கே.. சிக்கிய பலே கில்லாடி!

இந்திய கொடிக்கு பக்கத்தில் ஆஸ்திரேலிய கொடி.. ஓஹோ விவகாரம் பெருசா இருக்கே.. சிக்கிய பலே கில்லாடி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் பாறைக்குழிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை கட்டிடம் சின்ன கோடங்கிபாளையத்தில் உள்ளது. இதனிடையே தொழில்சாலையை ஒட்டியுள்ள பாறைகுழியில் அருண்குமாருக்கு சொந்தமான காஸ்டிங் தொழில் சாலையில் இருந்து கழிவுகளை பாறைகுழியில் கொட்டிவந்துள்ளார்.

மேலும் இப்பகுதியில் பாசன ஓடைகள் இல்லாத நிலையில் இதுபோன்று பாறை குழியில் சேமிக்கப்படும் தண்ணீரினால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் காஸ்டிங் கழிவுகள் கொட்டப்படுவதால் நீரின் தன்மை பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி விவசாயிகள், உரிமையாளர் அருண்குமாரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் கழிவுகளை அகற்றாமல் அலட்சியமாக செயல்பட்டதால் விவசாயிகள் அதிரடியாக கழிவுகளை அருண்குமாருக்கு சொந்தமான நிறுவன வளாகத்தில் கொண்டு சென்று கொட்டியுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மேற்படி தொழில்சாலை கட்டிடம் அமைந்துள்ள இடம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் அமைந்துள்ள இடத்தை ஒட்டி ஆபத்தான பாறைக்குழி உள்ளதால் எவ்வாறு தொழில்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது கேள்விகுறியாகியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளதா? சுமார் 25 ஆயிரம் சதுரடி கொண்ட கட்டிடம் கட்ட அனுமதித்தது யார்? என்பது போன்ற கேள்விகள் முன் வைக்கப்படுகிறது. மேலும் தொழில்சாலையில் நமது நாட்டின் தேசிய கொடியுடன் அந்நிய நாடான ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து அழகு பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய நாட்டின் நிறுவனம் பல்லடத்தில் நேரடி தொழில் துவங்க யாரிடம் அனுமதி பெற்றனர்?.
மேலும் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ள சூலூரில் இருந்து மிக அருகில் அந்நிய நாட்டின் தொழில்சாலைக்கு அனுமதி வழங்கி இருப்பது எவ்வாறு?. மேலும் ஆபத்து நிறைந்த பாறைக்குழியை ஒட்டி விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்திற்கு யார் பொறுப்பு? அந்நிய நாட்டின் தொழில்சாலை இதுபோன்று பாதுகாப்பில்லாத இடத்தில் தொழில்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் காஸ்டிங் கழிவுகளை கொட்டி நிலத்தடி நீரை பாழ்படுத்தும் இது போன்ற நிறுவனங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மேற்படி நிறுவனம் பொருட்களை உற்பத்தி (PRODUCT MANUFACTURING) செய்கையில்அதிகபடியான இரசாயண கழிவுகளை வெளியேற்றுகிறது. மேற்படி கழிவுகளை முறையாக அகற்றாமல் நிறுவனம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள பழைய கல்குவாரி இருந்த குழிகளில் இரசாயண கழிவுகளை சேமித்து வைத்துள்ளது. இந்நிறுவனம் Tamilnadu Pollution Control Board (TNPCB)-ல்தடையில்லா சான்று / அனுமதி பெறாமல் செயல்பட்டுவருகிறது. The Water (Prevention and Control of Pollution) Act, 1974 (Section 25 and 26), The Air (Prevention and Control of Pollution) Act, 1981 (Section 21), The Environment (Protection) Act, 1986 (Section 3 and 15), The Tamil Nadu Public Health Act, 1939 (Section 25), Tamil Nadu Pollution Control Board (TNPCB) Rules ஆகியவற்றின் படி இதுசட்டத்தை மீறும் செயலாகும்.
S.F.No: 317/1A, D.No : 2/854 என்ற இடமானது, நிலத்தின் உரிமையாளரால் canara bank-ல் அடமானத்தில் உள்ளது. வங்கியில் இருந்து முறையான அனுமதி எதுவும் பெறாமல் வேறு நிறுவனத்திற்கு இந்த இடத்தை லீஸ்க்கு கொடுத்து இந்த இடத்தில் நிறுவனத்தை நடத்துவது SARFAESI Act-2002 மற்றும் RDDBFI Act – 1993-ன் படி சட்டத்தை மீறும் செயலாகும்.

இந்தஇடத்தில் இதற்கு முன்பு Adhav Textiles Mills-என்ற நிறுவனம் நிலத்தின் உரிமையாளரால் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது திருப்பூர் கனரா வங்கியில் நிறுவனத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து 1.5கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் வங்கிக்கு தெரியாமல் மேற்படி இடத்தில் இருந்த தனது Adhav Textiles Mills-ஐ காலி செய்துவிட்டு அந்த இடத்தை QRCOPAR AGROFIBER PRIVATE LIMITED என்ற நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.

QRCOPAR AGROFIBER PRIVATE LIMITED- நிறுவனம் S.F.No: 317/1A, D.No : 2/854 என்ற இடத்தில் கட்டுமானம்செய்துள்ளது. இந்த கட்டுமானத்திற்கு அரசாங்கத்திடமிருந்துஎவ்விதமான அனுமதியும் வாங்கவில்லை. The Factories Act, 1948, Tamil Nadu Town and Country Planning Act, 1971 ஆகியவற்றின் படி இதுசட்டத்தை மீறும் செயலாகும்.
Directorate of Industrial Safety and health department-யிடம் இருந்தும் முறையான அனுமதி எதுவும் பெறாமல் இந்த தொழில்துறை நிறுவனமானது பெரும் விலையுள்ள இயந்திரங்களை கொண்டு வேலை செய்துவருகிறார்கள். The Factories Act, 1948, (Section 6, 7, 92) and Tamil Nadu Factories Rules, 1950 (Rule 3, 4 and 18) ஆகியவற்றின் படி இதுசட்டத்தை மீறும் செயலாகும்.

இந்நிறுவனம்அமைந்துள்ள S.F.No: 317/1A, D.No : 2/854 -இடமானதுவிவசாய நிலமாகவே இன்றளவும் அரசாங்க பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் அனுமதி பெறாமல் இயந்திரங்களை வைத்து தொழில் மேற்கொள்வது The Environment Protection Act, 1986ன் படி இதுசட்டத்தை மீறும் செயலாகும்.
இந்நிறுவனத்தில்தற்போது இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு தேவையான மின்சாரத்தை மின்ஆக்கிகள் (Generator) மூலமாக பயன்படுத்திவருகிறார்கள். தங்களிடம் எந்த அனுமதியும் இல்லாததால்தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து முறையாக அனுமதி பெற்று மின் இணைப்பு பெறமுடியாமல் அவசரகதியில் இதை செய்தும், தமிழ்நாடுமின்சார வாரிய உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்குபெரும் தொகையை லஞ்சமாக கொடுத்தும் அனுமதி பெற முயற்சித்து வருகிறார்கள்.
மேலும்இந்நிறுவனம் தற்போது எவ்வித அனுமதியும் பெறாமல் அமைத்துவரும் திட்டத்திற்கான மொத்தமதிப்பு 187 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தொகையானது பல்வேறுவெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக மறைமுகமான வழிகளில் முதலீடுகளாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடமானத்தில் இருக்கும் இடத்திற்கு கனரா வங்கியில் இருந்து முறையான தடையில்லா சான்று பெறாமலும், கட்டிட அனுமதி பெறாமல் (Building Approval), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல்(Tamilnadu Pollution Control Board), முறையாக மின் இணைப்பு பெறாமலும் சட்டத்திற்கு புறம்பான வகையில் இயங்கிவருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திவருகிறது.