தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு

தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு

​எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம்ஆண்டுதோறும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள், சிறந்ததமிழ் இதழ்கள், சங்கங்கள் என 12 தலைப்புகளில் ரூ.20 இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கி வருகிறது.

​அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராயவிருதுகள் வடபழனி வளாகத்தில் நடைபெற்றசெய்தியாளர்கள் சந்திப்பில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப்பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி அவர்களால்விருதுக்குத் தேர்வானவர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டன.

​தமிழ்ப்பேராயத் தலைவர் முனைவர் கரு. நாகராசன்அவர்கள் தமிழ்ப்பேராயப் பணிகள், தமிழ்ப்பேராயவிருதுகளின் சிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார்.

​இறுதியாக, தமிழ்ப்பேராயச் செயலர் முனைவர்
பா. ஜெய்கணேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார்.

தமிழ்ப்பேராய விருதுகள் –  2025 முடிவுகள்

 விருதின் பெயர்நூல் / விருதாளர் பெயர்
 1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதுபெரியம்மைஎழுத்தாளர் சுரேஷ்குமாரஇந்திரஜித்
 2. பாரதியார் கவிதை விருது கண்ணாடியில் தெரியும் பறவைகவிஞர் இளம்பிறை
 3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது கண்ணாடி கிரகத்தின் கவலைஎழுத்தாளர் மருதன்
 4. ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது ‘Arputha Thiruvanthathi’ Tmt. K. Padmaja Narayanan
 5. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல்தமிழ் மற்றும்தொழில்நுட்ப விருது  நிலவு எனும் கனவுமுனைவர் பெசசிக்குமார்
 6. பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது எகிப்தில் தமிழர் நாகரிகம்எழுத்தாளர் அமுதன்
 7. முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது பெண் எனும் போர்வாள்எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன்
 8. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது மகாகவிஆசிரியர் : வதிலை பிரபா
 9. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது திருவள்ளுவர் இலக்கிய மன்றம்தலைவர் : திரு. செல்லப்பன்
 10. அருணாசலக் கவிராயர் விருது ஆதித்தமிழர் கலைக்குழுநிறுவனர்  : வினோத் 
 11. பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள்சாதனையாளர் விருது முனைவர் கோதெய்வநாயகம்

முதல் ஏழு விருதுகளுக்குரிய விருதாளர்களுக்கு ரூ. 1,00,000 பரிசுத் தொகையாக வழங்கப்படுவதோடு அந்தநூல்களைப் பதிப்பித்த பதிப்பாளர்களுக்கு  ரூ. 20,000வழங்கப்படும். முத்துத்தாண்டவர் தமிழிசை விருதிற்குப்போதிய எண்ணிக்கையிலான தரமான நூல்கள் வராததால்இவ்வாண்டு அந்த விருது அளிக்கப்படவில்லை.  சிறந்தஇதழ், தமிழ்ச் சங்கம், கலைக்குழுவிற்கு ரூ. 50,000வழங்கப்படும். பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள்சாதனையாளர் விருதுக்கு ரூ. 3,00,000  வழங்கப்படும்.

விருது வழங்கும் விழா 24.10.2025 அன்றுகாட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெறும்.

2