இந்திய 30வது வருடாந்திர “மூக்கியல்” என்கிற “காது, மூக்கு, தொண்டை” மருத்துவத்தின் மூக்கியல்/மூக்கு”

இந்திய 30வது வருடாந்திர “மூக்கியல்” என்கிற “காது, மூக்கு, தொண்டை” மருத்துவத்தின் மூக்கியல்/மூக்கு”

இந்திய 30வது வருடாந்திர “மூக்கியல்” என்கிற “காது, மூக்கு, தொண்டை” மருத்துவத்தின் பகுதியான மூக்கியல்/மூக்கு தொடர்பான நோய்கள் பற்றி அறியும் அறிவியல் மருத்துவ கலந்தாய்வும், முதுநிலை மருத்துவர்களுக்கான பயிலக. நிகழ்ச்சிகளும் மற்றும் பல புதிய மருத்துவ வளர்ச்சிகளின் தகவல்களும் இடம் பெறவுள்ள. இந்நிகழ்ச்சி இம்மாதம் 28,29,30 தேதிகளில் பிரபல “Le Royal Meridian” சென்னை ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், 600க்கும் மேற்பட்ட காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களும். 50கும் மேலான வெளிநாட்டு மருத்துவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் ரோகித்சர்மா, செயலாளர் டாக்டர் அஜய் ஜெயின், மாநாட்டு புரவலர் பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், மற்றும் மாநாட்டு தலைவர் டாக்டர் அகில சாமி, செயலாளர் டாக்டர் ஆண்டனி இருதய ராஜன், பொருளாளர் டாக்டர் M.G. ரஜினிகாந்த் மற்றும் ஏனைய தலைவர்களும், மற்றும் மருத்துவ உபகரண, மற்றும் மருத்துவ “மருந்து” தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது புதிய கண்டுபிடிப்புகளையும் செயல்பாடுகளையும் காட்சிக்காக வைத்துள்ளனர்.

இந்த மருத்துவ மாநாட்டில் திரு. ககன்தீப் சிங் பேடி I.A.S., Additional Chief Secretary to Government என்று பல முக்கிய பிரமுகர்களும், சிறப்பு அழைப்பாளர்களும், மருத்துவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டின் மூலம், மூக்கியல் முதல் “ஒவ்வாமை” வரையிலான பல நோய்களை பற்றிய அறிவியல் தெளிவுகளும், புதிய மருத்துவ பயன்பாடுகளும் மக்களுக்கு போய் சென்றடையும் என்பது திண்ணம்.