BSNL இணைப்புகளை ஏர்டெல் மெக்கானிக் மூலம் திருடப்படுவதை கண்டித்து BSNL ஊழியர்கள் ஆறு சங்கங்கள் இணைந்து இன்று புரசைவாக்கத்தில் உள்ள BSNLபொதுமேலாளர் அலுவலகம் முன்பு BSNL தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பின்னர் பேசிய ஸ்ரீதர் சுப்ரமணியம் மார்ச் 6 ஆம் தேதி கொரட்டூர் பகுதியை சார்ந்த ஏர்டெல் மெக்கானிக் BSNL இணைப்பை துண்டித்து விட்டு இப்பகுதியில் BSNL இணைப்பு வராது என்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் BSNLதொழிலாளர்கள் ஒன்றிணைந்து அந்த மெக்கானிக்கை காவல்துறையிடம் ஒப் படைத்தனர் காவலர்கள் விசாரித்ததில் ஏர்டெல் நிறுவனம் தனக்கு கட்டளையிட்டு இந்த வேலையை செய்யச் சொன்னதாகவும் தெரிவித்தார் தொலைதொடர்புத் துறையில் நேரடியாக மோதுவதை விட்டு கொல்லைப்புறமாக இந்த வேலையை செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் கடந்த காலங்களில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களைவிட அதிக அளவில் BSNL க்கு பொதுமக்கள் திரும்பி இருப்பதாகவும் பேரிடர் காலத்தில் தனியார் தொலைத்தொடர்பு துறையைவிட BSNL நிர்வாகம் அதிக மக்களுக்கு தொலைத்தொடர்பு மூலம் உதவி செய்துள்ளது என்றும் இதை தமிழ்நாடு மக்கள் அறிவார்கள் என்றும் தெரிவித்தார் மேலும் இவ்வாறு திருட்டுத்தனமாக இணைப்புகளை துண்டிக்கும் ஏர்டெல் நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பொது மேலாளர் அவர்களை சந்தித்து மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் ஆர்ப்பாட்டத்தில் உமா சந்திரன், சுரேஷ் ராமலிங்கம், லிங்கமூர்த்தி , விஜயகுமார் உள்ளிட்ட ஆறு சங்கங்களை சேர்ந்த பொதுச் செயலாளர்கள் மற்றும் BSNLஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்