ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஏழை பெண்களுக்கு ஸ்டுடியோ7 நிறுவனத்தின் சார்பாக அழகு கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது

ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஏழை பெண்களுக்கு ஸ்டுடியோ7 நிறுவனத்தின் சார்பாக அழகு கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது

பிரபல அழகு கலை நிறுவனமான ஸ்டுடியோ7 தனது 100வது கிளையை தொடங்கிய நிலையில், இதனை கொண்டாடும் வகையில் ஸ்டுடியோ7 சார்பாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து அழகு கலைத்துறையில் சிறந்து விளங்கிய 112 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஸ்டுடியோ7 நிறுவனத்தின் நிறுவனர் ராஜேஷ்குமார் உள்பட சிறப்பு விருந்தினர்களாக
நந்தகுமார் ஐஆர்எஸ்
வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர்,
டாக்டர் கோகுலன்
ஆலோசனைக் குழு உறுப்பினர்: மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்,ஏவிஎம் கே சண்முகம்
இணை நிர்வாக இயக்குனர்: ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்,டாக்டர் தீபா சத்யன் IPS
காவல் கண்காணிப்பாளர் முதன்மைக் கட்டுப்பாட்டு அறை,
திருமதி.சுதாராஜன்
இயக்குனர்
indcon Manufacturing pvt ltd & Tekpak,திருமதி.கல்யாணந்தி சச்சிதானந்தன்
கல்வியாளர் தமிழ்நாடு விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் உறுப்பினர்,செல்வி டி விஜயலட்சுமி
துணைத் தலைவர் – யுனைடெட் டெக்னோ
பேராசிரியர் ரங்கநாதன் ஜே
மியான்மர் கவுரவ தூதர், சென்னை
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டுடியோ7 நிறுவனத்தின் நிறுவனர் ராஜேஷ்குமார்
தங்கள் நிறுவனம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் கிளைகளை கொண்டுள்ளது தற்போது நிறுவனத்தின் நூறாவது கிளை தொடங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்தார்…

தங்களது அழகு கலை நிறுவனத்தின் மூலம் ஆதரவற்ற அல்லது பத்தாம் வகுப்பு முடித்து மேற்படிப்பு படிக்க முடியாமல் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு அழகு கலை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும்

அது மட்டுமல்லாமல் அவர்கள் சுயமாக தொழிலை செய்யும் வகையில் அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்