சென்னை ஜூலை 19
சங்கத்தில் இருந்த நீக்கப்பட்ட உறுப்பினரும் துணை நடிகருமான வீரசமர் கொலை மிரட்டல் ஆடியோ வெளியிட்டு உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தென்னிந்திய திரைப்பட கலை இயக்குனர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்…
தென்னிந்திய கலை இயக்குனர் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது…
அப்போது பேசிய அச்சங்கத்தின் பொருளாளர் ரெனியன்…
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பெப்சி மற்றும் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட வீரசமர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததில் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரனையிலுள்ள நிலையில்
மீண்டும் சங்க நிர்வாகிகள் மீது கொலை மிரட்டல் ஆடியோ பதிவினை வெளியிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதால், காவல் துறையினர் அவர் மீதிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்…