சென்னை, ஜூலை 2023: இந்தியாவின் முன்னணி மல்டி பிராண்ட் எலக்ட்ரிக் வாகனக் கடையான BLive, அதன் முதல் எலக்ட்ரிக் வாகனக் கடையான கணேஷ் எலக்ட்ரிக் வாகனக் கடைகளை தமிழ்நாட்டில் திறந்துள்ளது. பிராண்டுகளின் தேர்வு மற்றும் சிறந்தசேவையில் வலுவான கவனம் செலுத்தி தமிழகத்தின்ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வாகனங்களை கொண்டுசெல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு, நிறுவனம் மாநிலத்தில் 25 மின்சார வாகனக்கடைகளைத் திறக்க இலக்கு வைத்துள்ளது. வேலூர்சாய்நாத் புரம் ஆரணி சாலையில் புதிதாக திறக்கப்பட்டகடையை வேலூர் எம்எல்ஏ, திரு. பி.கார்த்திகேயன்துவக்கிவைத்தார். தமிழ்நாடு மின்சார வாகனத்துறையில்சிறப்பாக செயலாற்றுவதாக பிலைவ் கருதுகிறது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கிளையில் பலமுன்னணி பிராண்டுகளான ரெவோல்ட், கைனெடிக்க்ரீன், ஓஎஸ்எம், ஹீரோ லெக்ட்ரோ, டாடா ஸ்ட்ரிடேர்மின்சார வாகனங்களை வழங்குகிறது.
புதிய கிளை திறப்பு விழாவில் பேசிய பிலைவ் நிறுவனர்மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமர்த் கோல்கர்கூறுகையில், “தமிழகத்தில் எங்கள் முதல் கடையைஇங்கு அமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த சேவையுடன் 2 மற்றும் 3-சக்கர வாகனங்களின்பரந்த தேர்வை வழங்குவதன் மூலம் இந்தபிராந்தியத்தில் மின்சார வாகனங்களைஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தத் தயாராகஇருக்கும் வாடிக்கையாளர்கள் தேர்வுக்குரிய இடமாகஇந்தக் கடை செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த அங்காடியை தமிழ்நாட்டில் நிறுவுவதன்மூலம், அதிகமான டீலர்களை உரிமையாளர்களாகஆக்குவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் எங்கள் தடத்தைவிரிவுபடுத்தவும், இங்கு வாங்குபவர்களுக்கு தடையற்றமின்சார வாகன அனுபவத்தை வழங்கவும்திட்டமிட்டுள்ளோம்”. என்று கூறினார்.
பிலைவ் என்பது பலதரப்பட்ட மின்சார வாகனங்களைவழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் தங்களதுwww.bliveEVstore.com இணையதளம் மூலம்பலதரப்பட்ட மின்சார வாகனங்களை வழங்குகிறது. இத்தளத்தில் 40கும் மேற்பட்ட தயாரிப்புகளைவழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்தநுகர்வோர் அனுபவத்தை வழங்குகிறது. இதன்ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை இந்தியா முழுவதும்உள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார மிதிவண்டிகள், டெலிவரி மின்சார வாகனங்கள் ஆகியவற்றைவழங்குவதன் மூலம், பிலைவ் 2025ம் ஆண்டுக்குள்இந்தியாவில் 100 பிரீமியம் மல்டி-பிராண்ட்ஸ்டோர்களாக விரிவடைய திட்டமிட்டுள்ளது. பிலைவ்தனது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சார்ஜிங்உள்கட்டமைப்பு, விற்பனைக்குப் பிந்தைய சேவைமற்றும் எளிதான நிதி விருப்பங்களை வழங்குவதன்மூலம் தனிப்பட்ட பயன்பாடு மற்றும் வணிகங்களுக்குஎலக்ட்ரிக் வாகனத்தை ஏற்றுக்கொள்வதைஎளிதாக்குகிறது.