உணவில் சுவைக்காக சேர்க்கப்பட கூடிய ஒரு உணவு பொருள்தான் இந்த அஜினமோட்டோ. இது நாம் சாப்பிடும் எல்லா ரெடிமேட் உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியமான கலவையாகும்.
அஜினோமோட்டோ என்பது சோடியம் மற்றும் குளுட்டமிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் கலவையாகும். சீனர்களின் உணவுகளான நூடுல்ஸ், சூப், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளில் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டது. அஜினோமோட்டோவில் வைட்டமின்கள், புரதங்கள், கொழுப்புகள் என எதுவும் இல்லை.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி உணவில் 0.5 கிராம் அஜினோமோட்டோவை சேர்த்து கொள்வது பாதுக்காப்பானது. அஜினோமோட்டோவை குறைந்த அளவில் பயன்படுத்தினால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
அஜினோமோட்டோவை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் வியர்வை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. குடலில் அமிலத் தன்மை, வயிற்றில் எரிச்சல், மூட்டு மற்றும் தசை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகளும் உருவாகும்.
அஜினோமோட்டோ அதிகம் சேர்ப்பவர்களுக்கு ஒற்றை தலைவலி அல்லது கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். அஜினோமோட்டோவில் உள்ள கலவைகள் தூங்கும்போது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் அஜினோமோட்டோ உண்பவர்கள் குறட்டை பிரச்சனைகளுக்கு ஆளாவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு ஆய்வில் அஜினோமோட்டோவை அதிகமாக எடுத்துக் கொள்வது புற்றுநோய் செல்களை இனப்பெருக்கம் அடைய செய்வதோடு பெருங்குடல் புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என கூறப்பட்டது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் அவர்கள் அஜினோமோட்டோவை தவிர்ப்பது நல்லது.
மேலே குறிப்பிட்ட விளைவுகள் அனைத்தும் அதிகப்படியான அளவில் அஜினோமோட்டோவை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் ஆகும்.