குழந்தைகளை மேம்படுத்த நடைபெற்ற சங்கல்ப் ஜோதி நிகழ்ச்சி

குழந்தைகளை மேம்படுத்த நடைபெற்ற சங்கல்ப் ஜோதி நிகழ்ச்சி

சென்னை, நவம்பர்  2022: நவீன டிஜிட்டல் உலகில் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்களாகக்குழந்தைகளை மேம்படச்செய்து பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்குத் தன்னுணர்வை ஏற்படுத்த, சூளை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் KEI வயர்ஸ் அன்ட் கேபிள்ஸ் நிறுவனத்தாரால் சங்கல்ப் ஜோதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்ச்சியின் போது ஒரு தகவல் அடுக்கு ஒலி இசைப்பாடல் (ஜிங்கிள்) மூலம் “குட் டச் பேட் டச்” என்ற தலைப்பு குறித்த விழிப்புணர்வு ஜூனியர் பிரிவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் ஒரு தெருமுனை (நுக்கட்) நாடக நிகழ்ச்சி மூலம் நல்ல “டிஜிட்டல் குடிமக்களாக” விளங்க மூத்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஊக்குவிக்கப்பட்டனர். இணையம் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் இருப்புக்கான பிற உதவிக்குறிப்புகளைக் குழந்தைகள் எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாடகம் முழுக் கவனம் செலுத்தியது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினராக திரு. P. கார்த்திகேயன், மூத்த தொழில்நுட்ப இயக்குனர் / விஞ்ஞானி F பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் KEI -இல் இருந்து திரு. விக்னேஷ் குமார் சீனியர் மேலாளர் மார்க்கெட்டிங், தெற்கு, நமது சிறப்பு விருந்தினர்களாகக்கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது தலைமை விருந்தினர்கள், மின் நுட்ப தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் பொறுப்புடனும், அச்சமின்றியும்,வலிமையுடனும் விளங்குவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

திரு. P. கார்த்திகேயன் அவர்கள் பார்வையாளர்கள் இடையில் உரையாற்றினார். 

மிகவும் உணர்ச்சிப்பூர்வமான “குட் டச் பேட் டச்” என்பதைப் பற்றி இந்த அடுக்கு ஒலி இசைப்பாடல் (ஜிங்கிள்) மூலம் உணர்வுப்பூர்வமாக குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லப்பட்டது. மேலும் எடுத்துக்காட்டுக்கள் மூலம் இந்த இரண்டு செயல்பாடுகளுக்கிடையே அவர்கள் எவ்வாறு வித்தியாசத்தை உணருவது மற்றும் அம்மாதிரியான ஒரு சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்றவிழிப்புணர்வும் அவர்களுக்கு ஊட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருமதி மெர்சி பாத்திமா, பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களும் கொண்டு இந்த நிகழ்வை நடத்திக்காட்டிய குழந்தைகள் மற்றும் மாணவர்களின் ஆர்வத்தையும் மற்றும் அவர்கள் முனைப்போடு காட்டிய உற்சாகத்தையும் பெருமளவில் போற்றிப் பாராட்டினார்கள். இறுதியாக சங்கல்ப் ஜோதி நிகழ்ச்சியில் பங்கு பெற்றமைக்காகவும் மற்றும் தங்களின் நேரத்தை ஒதுக்கியதற்காகவும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முனைப்புடனும் பெரும் ஆர்வத்தோடும் பங்குபெற்றசூளை, செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,அதன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழு, அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் வழங்கப்பட்டது. KEI வயர்ஸ் அன்ட் கேபிள்ஸ் நிறுவனத்தார் மின் நுட்பத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *