அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனரும் தேசிய தலைவருமான ஆ.ஹென்றி இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷனில் நடைபெற்றது . மணமக்கள் எச். பிரியா, பி. விஷ்ணு ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் .
மேலும் அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாநகர் எம்.கே.மோகன், பல்லாவரம் கருணாநிதி, எழும்பூர் பரந்தாமன், வேளச்சேரி ஜே. எம். எச். அசன் மவுலானா மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே .வாசன், நீதியரசர் வள்ளிநாயகம், சி.எம்.டி .ஏ வாரியத்தலைவர் பூச்சி முருகன், கிங்மேக்கர் ராஜசேகர், மெட்ராஸ் பிராப்பர்டீஸ் ஜெயச்சந்தின் , வாக்ஸ் குழுமத் தலைவர் இராவணன் ஞானசுந்தரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் எஸ்.திருநாவுக்கரசு, கே.வி. தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீம்முன் அன்சாரி, அதிமுக முன்னாள் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா, அனைத்திந்திய பத்திரிக்கையாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத் தலைவர் அரிமா எஸ். ராஜேந்திரன் , மாமன்ற உறுப்பினர் கதிர்முருகன், ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் , தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், ரியல் எஸ்டேட் முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

