REFCOLD இந்தியா 2023: இந்தியாவின் ரூ.4.3 டிரில்லியன் மதிப்புமிக்க குளிர் சங்கிலி துறை மற்றும் உணவு கழிவு தீர்வுகள் குறித்த சிறப்பு நிகழ்வு

REFCOLD இந்தியா 2023 ஆனது குளிர்பதனம் மற்றும் குளிர்-சங்கிலி தொழில்நுட்பங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தெற்காசியாவின் முன்னணி கண்காட்சி மற்றும் மாநாடாகும். இந்நிகழ்வானது, சென்னை வர்த்தக மையத்தில் இன்று (12-10-2023) தொடங்கியது. இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங், ரெஃப்ரிஜிரேட்டிங் மற்றும் ஏர் கண்டிஷனிங் இன்ஜினியர்ஸ் (ISHRAE) மற்றும் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், REFCOLD இந்தியா 2023 நிகழ்வானது தொழில்துறையை மாற்றியமைக்கும் இலக்குடன் துவங்கப்பட்டுள்ளது. தவிர, குளிர்பதனம் மற்றும் குளிர்-சங்கிலித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4.3 டிரில்லியன் ரூபாய்க்கு ஒரு பரந்த சாத்தியமான குளிர்-சங்கிலி சந்தைக்கான இலக்கினை வெளிப்படுத்தியது. 

இந்நிகழ்ச்சியின் பிரமாண்டமான தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஆர். வேல்ராஜ், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், திரு. ராஜா எம் ஸ்ரீராம், தலைவர், RECFOLD சென்னை, ISHRAE இன் தேசியத் தலைவர் திரு. யோகேஷ் தக்கர் மற்றும் இந்தியாவின் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் நிர்வாக இயக்குநர் திரு யோகேஷ் முத்ராஸ் உட்பட ஏராளமான பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். 

REFCOLD இந்தியாவின் 6வது எடிஷனானது பிரம்மாண்டமாக துவங்கியது. இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களுடன் தொழில்துறையின் மாற்றத்தை விரும்பும் சிறந்த நிபுணர்கள், வணிகங்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். குறிப்பாக,  புளூஸ்டார், கோப்லேண்ட், ரினாக் இந்தியா, டெகும்சே, டெய்கின், கே-ஃப்ளெக்ஸ், யஸ்காவா மற்றும் டான்ஃபோஸ் போன்ற தொழில்துறை ஜாம்பவான்களும் இடம் பெற்றிருந்து ஹைலைட். இந்நிகழ்ச்சி 10,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்டார்கள். மாறும் வணிக வாய்ப்புகள், அறிவு-பகிர்வு அமர்வுகள் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகிய நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றது.  

ISHRAE தேசியத் தலைவர் திரு யோகேஷ் தக்கர்பேசுகையில், “ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி தீர்வுகளை ஏற்றுக்கொள்வதென்பதானது,  பாரம்பரியமிக்க அழிந்துபோகக்கூடிய துறையில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்தும். மேலும், சந்தை சூழல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கணிசமான மாற்றங்களைக் கொண்டுவரும். 60% விவசாயத்தை தொழிலாக மேற்கொள்ளும் மக்கள் வாழும் இந்நாட்டில் இது மிகவும் முக்கியமானது. ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி தீர்வுகளின் திறனைப் பயன்படுத்த, தளவாடங்களை மேம்படுத்துதல், மதிப்பு கூட்டல் வசதிகளை மேம்படுத்துதல், பசுமை குளிர்பதன நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும் ஆற்றல்-திறனுள்ள குளிரூட்டும் முறைகள் மற்றும் இயற்கை குளிர்பதனங்கள் ஆகியவை மிக முக்கியமானது. இதேபோல், இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட உணவுத் தொழில் குறிப்பிடத்தக்க சாத்தியமுள்ள ஒரு பரந்த அரங்காகும். இது உணவு விநியோகத் துறையின் வளர்ச்சிக்கான கணிசமான அறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தவிர, இது மேம்பட்ட குளிர்பதனம் மற்றும் குளிர் சங்கிலித் தீர்வுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் போது, உணவின் தரம், பாதுகாப்பு மற்றும் விநியோகத் திறனை மேலும் மேம்படுத்த முடியும்” என்று கூறினார். 

“தொற்றுநோய் காலக்கட்டமானது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2026 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் ஆன்லைன் உணவு விநியோக சந்தை சுமார் 21 பில்லியன் டாலர்களை எட்டும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) கிட்டத்தட்ட 30% ஆகும்” என்று மேலும் தெரிவித்தார். 

MOFPI இன் குறிப்பிடத்தக்க ஆதரவுடன் (இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம்) மற்றும் IIR (சர்வதேச குளிர்பதன நிறுவனம்), NCCD (குளிர் சங்கிலி வளர்ச்சிக்கான தேசிய மையம்), IDA (இந்திய பால் சங்கம்), IIAR (அம்மோனியா குளிர்பதன சர்வதேச நிறுவனம்) போன்ற பிற மதிப்புமிக்க சங்கங்கள் ஆதரவுடனும் இந்த நிகழ்வு சப்ளையர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையிலான இடைவெளியை வெற்றிகரமாகக் குறைத்தது.

REFCOLD இந்தியா 2023 இன் முக்கியத்துவம் குறித்து இந்தியாவின் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் நிர்வாக இயக்குனரான திரு.யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, “ REFCOLD இந்தியா ஆனது புதிய எல்லைகள் மற்றும் மதிப்புமிக்க ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு மாற்றத்தக்க பயணத்தை வழங்குகிறது.  அதுமட்டுமின்றி, இந்த எக்ஸ்போ ஆனது தொழில் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளவும், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.  அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் விரிவான குளிர்பதனக் கிடங்குகளை நிறுவுவதன் மூலம் குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலித் தொழிலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்த முன்முயற்சி உணவு வீணாவதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியைத் அதிகரிக்கவும் வழிவகை மேற்கொள்கிறது. ‘சிறந்த எதிர்காலத்தினை புதுமையின் மூலம் பாதுகாத்தல்’ என்ற கருப்பொருளுடன் இணைந்த உள்ளடக்கம் நிறைந்த எங்கள் மாநாடானது நிபுணர்கள், பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களைச் சேகரித்து சந்தைக்கு உண்மையிலேயே தகுதியான வேகத்தை வழங்கும்” என்று மகிழ்வுடன் கூறினார். 

இந்தியாவின் குளிர்பதன சேமிப்பு மற்றும் குளிர்பதன தொழில்நுட்ப சந்தை பற்றிய நுண்ணறிவு:

குளிரூட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் ஆற்றல்-திறனுள்ள அமைப்புகளுக்கு வழிவகுத்தன, குறிப்பாக இரசாயன உற்பத்தி போன்ற உயர் ஆற்றல் தொழில்களில் நன்மை பயக்கும்.  உகந்த அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற குளிர்பதனப் பொருட்கள் கார்பன் தடயங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், குளிரூட்டும் நீர் கோபுரங்கள் போன்ற பாரம்பரிய குளிரூட்டும் முறைகளுடன் ஒப்பிடும்போது உமிழ்வு மற்றும் நீர் கழிவுகளைக் குறைக்கின்றன.

கூடுதலாக, இந்தியாவில், விவசாய உற்பத்தி அதிகமாக உள்ளது, ஆனால் அதற்கான அணுகல் குறைவாக உள்ளது, ஒழுங்கமைக்கப்பட்ட உணவு விநியோகம் மற்றும் இ-காமர்ஸ் பிரிவுகளின் வளர்ச்சியால் மேலும் இயக்கப்படும் குளிர் சங்கிலித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

REFCOLD இந்தியா ஆனது உலகளாவிய மற்றும் இந்திய குளிர்பதனத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை புதுமைகளை உருவாக்க மற்றும் உணவுக் கழிவுகளை எதிர்த்துப் போராட கைகொடுக்கிறது. ஆக, இதுவே குளிர் சங்கிலி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.