சென்னை ~~ தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் பசியில் வாடும் ஏழைகளுக்கு சத்தானதினசரி உணவை வழங்கும் மலபார் குழுமத்தின் ‘பசி இல்லாத உலகம்’ என்ற கார்ப்பரேட் சமூகபொறுப்பு (CSR) திட்டமானது, அதிக அளவிலான மக்களையும் நகரங்களையும் உள்ளடக்கும்வகையில் விரிவாக்கப்பட உள்ளது. தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிஇலக்கு இரண்டிலிருந்து பூஜ்ஜியத்துக்கு (2 & 0) கொண்டு பட்டினியில் வாடுவோர் யாருமில்லைஎன்ற இலக்கிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் தொடங்கப்பட்ட இந்த லட்சிய திட்டத்தின் கீழ்31,000 உணவு பாக்கெட்டுகள் தினமும் விநியோகிக்கப்படுகின்றன. விரிவாக்கம் செய்வதன் ஒருபகுதியாக, 51,000 உ ணவு பாக்கெட்டுகள் இனி விநியோகிக்கப்படும். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலம் சார்பாக இன்று துவக்க விழா சென்னை அண்ணா நகர்மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. இ. பத்மநாபன் அவர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் சென்னைஉயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.எஸ்.கே. கிருஷ்ணன் அவர்கள். மற்றும் மதிப்பிற்குரியசென்னை அண்ணாநகர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. M. K மோகன் அவர்கள் ஆகியோர்கலந்து கொண்டனர்.இவர்களுடன் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலதலைவர் திரு.யாசர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டலதலைவர் திரு. அமீர் பாபு ஆகியோர் உள்ளனர். தற்போது, வளைகுடா நாடுகளில் உள்ள சில மையங்களிலும், யூனியன் பிரதேசங்கள் உட்பட 16 மாநிலங்களில் அமைந்துள்ள 37 நகரங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த திட்டம் இப்போது 16 மாநிலங்களில் உள்ள 70 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். மேலும், உலகின் மிகப்பெரிய அளவிலான தங்கசுரங்கத்திற்கு பெயர் பெற்ற ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் பள்ளி குழந்தைகளுக்கும் இதேதிட்டத்தைத் தொடங்க இந்த குழு திட்டமிட்டுள்ளது. ‘‘ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு வேளைஉணவைப் பெற போராடும் ஏராளமான மக்கள் நம்மைச் சுற்றி இன்னும் உள்ளனர். நம்உலகத்திலிருந்து பசியை அகற்ற கடுமையாக உழைக்கும் அரசாங்கங்களுக்கும்முகமைகளுக்கும் ஒரு சிறிய உதவியாக இந்த திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்,” என்றுஎம்.பி.அகமது கூறினார். மிகவும் பிரபலமான சமூக தொண்டாற்றும் தன்னார்வ தொண்டுநிறுவனமான ‘தனல் & தயா ரீஹபிலிட்டேஷன் டிரஸ்ட்’ – ன் (Thanal – Daya Rehabilitation Trust)) உதவியுடன் ‘பசி இல்லாத உலகம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு சுகாதாரமான சூழலில்திறமையான சமையல்காரர்களால் சத்தான உணவைத் தயாரிக்க நவீன சமையலறைகள்வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மலபார் குழுமம் மற்றும் தனல்-ன்தன்னார்வலர்கள் தெருக்களிலும் நகர்ப்புற புறநகர்ப் பகுதிகளிலும் தேவைப்படும் மக்களைஅடையாளம் கண்டு உணவு பாக்கெட்டுகளை அவர்களுடைய வீடுகளுக்கே சென்றுவிநியோகிக்கிறார்கள். பசியின் சமூக மற்றும் பொருளாதார காரணங்களை மதிப்பிடுவதற்குபயனாளிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றன. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, தனாலுடன் இணைந்து மலபார் குழுமம், ஏழை மற்றும் அனாதை வயதானபெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் மற்றும் பிறசுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்கான சூகிராண்ட்மா ஹோம்’ திட்டத்தைத்தொடங்கியுள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இதுபோன்ற இரண்டு சூகிராண்ட்மாஹோம்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை மற்றும்கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் இதேபோன்ற வீடுகளை அமைப்பதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது. புறக்கணிக்கப்பட்ட மற்றும் அனாதை பெண்கள் கண்ணியத்துடன் வாழஇது ஒரு வாய்ப்பை வழங்கும். தெருவோரக் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியைஆதரிப்பதற்காக இந்த குழுமம் நுண் கற்றல் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதவிர, மலபார் குழுமம் பிற சமூக நலன் மற்றும் மருத்துவ பராமரிப்புக்கான நிதி உதவி, மாணவிகளுக்கு கல்வி ஆதரவு மற்றும் வீடு கட்டுமானத்திற்கான பகுதி ஆதரவு போன்ற தொண்டுநடவடிக்கைகளிலும் தீவிரமாக உள்ளது. மலபார் கோல்டு & டைண்ட்ஸ் உட்பட தன்னுடையநிறுவனங்களிலிருந்து கிடைக்கும் லாபத்தில் ஐந்து விழுக்காட்டினை குழுமம் சமூகநலப்பணிகளுக்கான ஒரு கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) நிதியாக ஒதுக்குகிறது. இதுபோன்ற சமூக நலத் திட்டங்களுக்காக இந்த குழுமம் ஏற்கனவே ரூ. 246/- கோடிசெலவிட்டுள்ளது.
Category: Business
G2G.News Targets Competitors and Foreign iGaming Companies, Favors Delta Corp.
India, May 2024: It has come to light that G2G.News, a gaming news website launched in May 2021, is using its platform to create bias against
MG Motor India expands its network in Chennai; inaugurates new dealership and workshop
Chennai, May 2024: MG (Morris Garages), a 100-year-old automobile brand with a British legacy, strengthens its commitment by inaugurating a new state-of-the-art showroom and workshop in Chennai. The expansion of MG Motor India’s
Phoenix Marketcity Chennai to Host an Exciting Indian Cube Challenge this Weekend at Holiday Land
Chennai, May, 2024: Phoenix Marketcity Chennai, one of the premium malls of Chennai renowned for its luxurious shopping experience and vibrant events, is all set
L&T Finance Ltd. launches ‘The Complete Home Loan’ in Chennai
Chennai, May 2024: L&T Finance Ltd. (LTF), one of the leading retail financiers, has launched ‘The Complete Home Loan’ for the customers of Chennai with
FICCI Summit Focuses on Digitized HR System
Chennai: The much-awaited FICCI Tamil Nadu State Council HR Summit and Score Awards 2024 on the Topic “Redefining HR- The Power of People” opened on a promising note here on
MADDYS 2024 Surpasses Records with Record Entries!
Chennai, May 2024 The Advertising Club of Madras is pleased to announce a final extension of the deadline for entries to the prestigious MADDYS 2024
Chennai to Host TN Digital Summit 2024, Biggest Ever Conference on Digital Transformation
Chennai, May 2024 The inaugural edition of TN Digital Summit 2024, a high-octane conference on digital transformation and business, with a special focus on digital success
Asian African Chamber of Commerce & Industry (AACCI) Launches Tamil Nadu Chapter Office
Chennai, May 2024 – The Asian African Chamber of Commerce & Industry (AACCI) proudly announces the official launch of its Tamil Nadu Chapter office. The
Exciting Weekend at Phoenix Marketcity: Holiday Land Hosts Junior Fashion Forward and Spellbee Finale
Chennai, May 20, 2024 – This past weekend, Chennai’s premium mall, Phoenix Marketcity, was abuzz with excitement as it hosted the much anticipated “Spellbee Finale” and