டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆன்லைன் கல்வி கற்க ஒரு விழிப்புணர்வு எக்ஸ்போ

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆன்லைன் கல்வி கற்க ஒரு விழிப்புணர்வு எக்ஸ்போ

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பிவிஆர் மால், ஸ்கை ஒன் மால் , எக்ஸ்பிரஸ் அவென்யு மால் இந்த மூன்று இடங்களிலும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க ஒரு விழிப்புணர்வு எக்ஸ்போ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த எக்ஸ்போ வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை காலை 11:00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மூன்று இடங்களிலும்
நடைபெறும். இதில் கல்விப் பயில இணையதளம் மூலம் கல்வி பெற ஒரு சிறந்த வாய்ப்பாக டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தற்போது யுஜிசி அனுமதியுடன் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது.

படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மற்றும் கடல் சார்ந்த துறையில் பணிபுரிபவர்கள் ட்ராவல்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் வீட்டிலிருந்தபடியே இந்த கல்வியை தொடர்ந்து படிக்கலாம் மேலும் இந்த கல்வியை இன்றைய காலகட்டங்களில் மாணவர்களுக்கும் வேலையில் பணிபுரியும் வெளிநாட்டில் பணிபுரிவர்களுக்கும் இந்தியாவில் உள்ள
மற்ற மாநிலங்கள்
பணியில் இருப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த கல்வி மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அனுமதியுடன் இந்த கல்வியை வழங்கி வருகிறது

இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை நிறுவனம் சார்பில் அதன் தலைவர் திரு அருண்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் வகுப்புக்கான விநியோகித்து தொடங்கி வைத்தார் உடன் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்பதிவாளர் திரு சி பி பழனிவேல் அவர்களும் , இணை பதிவாளர்களும் காளிதாசன் அவர்களும் , திருமதி மாலினி பாண்டே , ஜாயின் டைரக்டர் டாக்டர் செந்தில்குமார் அவர்களும் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்